Monday, March 23, 2009

தமிழ் துரோக தலைவர்கள்

தமிழ் துரோக தலைவர்கள்: ஈழ மக்களின் பிரச்சனைகள் வரும் தேர்தலில் எதிரொலிக்காது.1967 -இல் தமிழர்களுக்காக ஹிந்தி எதிர்ப்பு பிரச்னை செய்து பலர் மாண்ட போது, அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் இந்த தலைவர்கள்.ஆனால் இவர்கள் தம் உறவுகளை மட்டும் ஹிந்தி படிக்க சொன்னது தனி கதை.ஹிந்தி மொழியையும் கற்போம், தமிழ் பெயரை சொல்லி நம்மை ஏமாற்றி வரும் கையாலாகத,கண்டன அறிக்கைகளை மட்டும் விடும், தமிழ் துரோகிகளை புறம் தள்ளுவோம்.
ராஜபக்சே-வின் நோக்கம் எல்லாம் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்பதுதான், இதை அறிந்திருந்தும் நீங்கள் அவன் கூட சேர்ந்து கை-குளுக்குகிரிர்கள், ஆயுதங்களை கொடுத்து தமிழர்களை கொல்ல சொல்கிறிர்கள்,தமிழர்களை கொள்வது தான் உங்கள் திட்டம் என்றால் அதை வெளிபடையாக சொல்லிவிட்டு கொல்லுங்கள்,அதை விட்டுவிட்டு ஐயகோ தமிழினம் அழிகிறதே, சட்டசபை-இல் திர்மானம், MP-க்கள் ராஜினமா, மத்திய அரசை கண்டித்து தந்தி, 48 மணி நேரம் எங்களால் தான் போர் நிறுத்தம் வந்தது, நாங்கள் அதை செய்தோம் நாங்கள் இதை செய்தோம் என்று "எழவு வீட்டில் ஒப்புக்கு ஒப்பாரி வைக்காதிர்கள். உலக தமிழனுக்கே தெரியும் நீங்கள் கொடுத்த குண்டுகளும் தான் ஈழத்தில் தமிழனை கொல்கிறது என்று.நம் இனத்தை அழிக்கும் ராஜபக்சே மட்டும் கொலைகாரன் அல்ல அவனுக்கு ஆயுதங்களை கொடுத்து, வீரர்களை கொடுத்து தமிழினத்தை அழிக்க சொல்லும் ஒவ்வொரு இந்தியனாகிய தமிழனும்-தான்(நான் உள்பட).
மீனவர்களின் துயரங்கள் எல்லாம் உங்களுக்கு எங்கு தெரியபோகிறது, உங்களை சொல்லியும் குற்றமில்லை,பாவம் நீங்கள் உங்கள் தொழில்சாலைகளின் வேலைகள்,கல்லுரி நிர்வாகம், பல புதிய தொலைக்காட்சிகள் தொடக்க வேலைகள்,பாராட்டு விழாக்கள் மற்றும் பல்வேறு விழாக்களில் இடுபடவே நேரம் இல்லை இதையும் தாண்டி நேரம் இருந்தால் சுவிஸ் பேங்க் அக்கௌன்ட் ஒபெநிங் என்று சிலர் பிஸி ஆகி விடுகிறிர்கள்,.அன்று கட்ச-தீவை தாரை வார்த்து கொடுத்து மீனவர்களின் வாழ்வில் தெரு-புழுதியை அள்ளி போட்டிர்கள்,இன்று அதில் கொலைகார ராஜபக்சே கட்டிடங்களை கட்ட போகிறானாம்,இன்று கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் சென்றால் ஸ்ரீலங்கா அரசு சுட்டு கொல்கிறது, அதற்க்கு நீங்கள் கவலை படவேண்டிய அவசியமே இல்லையே என்னென்றால் உங்களிடம்-தான் கண்டன அறிக்கைகள் இருக்கிறதே அதை ஒற்றை விட வேண்டியதுதானே.மக்களின் உயிர்-ரை கூட அரசிலாக்கும் ஒரே இனம் நம் தமிழினம் தான்.ராஜராஜ சோழனையும்,சேரன் செங்குட்டுவனையும்,பொற்கை பாண்டியனையும்,மனுநிதி சோழனையும் சொன்ன நமது வரலாறு, பதவிக்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கும் உங்களை நிச்சயம் காரி-துப்பமல் விடாது.ஈழத்தில் நடக்கும் செய்திகள் தமிழ்நாட்டில் மறைக்கபடுகின்றன.செய்திகளை மறைத்தால் அது செய்தி இல்லாமல் ஆகிவிடுமா?அன்புள்ள செய்தி உடகங்களே நீங்கள் செய்திகளை மறைத்தல் மக்களிடம் இருந்து மறைந்து விடுவிர்கள் என்பது நிதர்சனமான உண்மை.சிலர் டாய்லட் போவதைக்கூட செய்தியாக சொல்லும் தொலைக்காட்சிகள், எம் மக்கள் பதுங்கு குழிகளில் புதைவதை ஏன் சொல்ல மறுக்கின்றன.
தமிழக அரசியல்வாதிகளே, நீங்கள் ஒரு பினதின்னி கழுகுகள், நீங்கள் ஒரு வேடதாரிகள், நீங்கள் ஒரு பதவி வெறியன்கள், நீங்கள் ஒரு கொள்ளைகாரர்கள், நீங்கள் ஒரு தமிழின கொலைகாரர்கள், நீங்கள் ஒரு ராஜபக்சேவின் கைகூலிகள்....., என்று எதிர்காலம் உங்களை சொல்லும். கொடுங்கள் கொடுங்கள் ஆயுதங்களை எல்லாம் கொடுத்து தமிழர்களை கொல்ல சொல்லுங்கள், ஆனால் நீங்கள் மட்டும் ஒருநாள் சாகமலா இருக்க போகிறிர்கள் அன்று உலக தமிழர்களே வெடிவெடித்து கொண்டாடுவார்கள் பல்லாண்டு வாழ்ந்து என்றாவது ஒருநாள் செத்து விடுங்கள்,ஹிட்லர்: நமக்கு எதிரிகளே இருக்க கூடாது ,இருந்தால் அவன் நம்மை எதிர்க்க கூடாது ,எதிர்த்தால் அவனுக்கு எதிர்காலமே இருக்க கூடாது, கருணாநிதி:நமக்கு எதிரிகளே இருக்க கூடாது ,இருந்தால் அவன் தேர்தல் பிரசாரதிற்கு போக கூடாது,போனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.நாஞ்சில் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.கட்சி போராளியாக இருந்த நாஞ்சில் சம்பத்தை தமிழின போராளி ஆக்கிய கருணாநிதிக்கு நன்றி .
நீதி மன்ற புறக்கணிப்பு குறித்து கருணாநிதி:இது வழக்கறிஞர்-களுக்கும் நீதி மன்றத்திற்கும் இடையே உள்ள பிரச்னை.இனி சொன்னாலும் சொல்வார்: மின்வெட்டு குறித்து, கருணாநிதி:இது மக்களுக்கும் மின்சாரத்திற்கும் இடையே உள்ள பிரச்னை.ஈழ தமிழர் குறித்து,கருணாநிதி:இது மரணத்திற்கும் மக்களுக்கும் இடையே உள்ள பிரச்னை.
ஸ்பெக்ட்ரம் குறித்து,கருணாநிதி:இது ஸ்பெக்ட்ரம்-திற்கும் ராஜாவுக்கும் இடையே உள்ள பிரச்னை.
சட்டம் ஒழுங்கு குறித்து,கருணாநிதி:இது சட்டத்திற்கும் ஒழுங
நன்றி அருள்

Sunday, March 22, 2009

இந்திய மருத்துவக் குழுவினரின் உள்நோக்கம் என்ன..?

இந்திய மருத்துவக் குழுவினரின் உள்நோக்கம் என்ன..?
திகதி: 22.03.2009 //
வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக் காக சிகிச்சையளிக்கும் நோக்கில் புல்மோட்டை பகுதியில் மருத்துவ வசதிகளை வழங்கி வரும் இந்திய மருத்துவர்களின் உள்நோக்கம் அம்பலத்திற்கு வந்துள்ளது. மருத்துவர்கள் என்ற போர்வையில் வந்துள்ள குழுவினர் அனைவரும் இந்திய இராணுவத்தின் புலனாய்புப் பிரிவினரால் "றோ" அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இம் மருத்துவக் குழுவில் 1987ம் ஆண்டு வந்த இந்திய அமைதிப்படையினரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கான உதவி என்ற போர்வையில் வன்னியிலுள்ள மக்களை படுகொலை செய்யும் சிங்கள இராணுவத்திற்கு பெரும் உதவிகளை மேற்கொள்வதற்காகவே இவர்கள் இங்கு வந்தள்ளதாக தெரிய வருகின்றது.
இம்மருத்துவர்கள் இடுப்பில் ஏதோ ஒரு கூரான பொருளை வைத்திருப்பதாகவும் இது அநேகமாக கைத்துப்பாக்கியாவும் இருக்கக்கூடும் எனவும் சிகிச்சை பெற்றுத் திரும்பிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் எந்தவித பதட்டமுமின்றி சேவையில் ஈடுபடு வதாகவும். அதிகமாக அங்கு சிறு காயங்களுக்காக சிகிச்சை பெற வந்த மக்களிடம்
'இன்னும் எவ்வளவு விடுதலைப்புலிகள் அங்கு இருக்கிறார்கள்?
விடுதலைப் புலிகளின் தலைவர் இப்போது எங்கே இருக்கிறார்?
புலிகளுடைய விமானங்கள் எங்கு இருக்கின்றன?
போன்ற விடையங்களை மக்களிடம் கேட்கின்றனராம். இன்னும் சிலரிடம் வன்னியிலுள்ள சில இடங்களின் பெயர்களைக்கூறி அவை எங்கிருக்கின்றன. எதற்கு அருகில் இருக்கின்றன போன்ற விடையங்களை கேட்கின்றனராம்.
இம் மருத்துவ குழுவினர் உண்மையான மருத்துவ சேவையில்லாமல் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் பணிபுரிவதாக தமக்குத் தெரிவதாக மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இது இந்திய மருத்துவக் குழுவினரின் மருத்துவ முகாம் அன்றி ஏதோ விசாரணைமுகாம் போல இருப்பதாக பொதுமகன் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இம் மருத்துவக் குழு முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மக்களில் மூவர் இறந்தமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு பகுதியில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் ஆட்லறி, பீரங்கித் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை இம் மருத்துவ குழுவைச் சேர்ந்தவர்கள் வழங்கிவருவதாகவும் விமானத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தகவல்களை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
சிறிலங்கா இராணுவத்திற்கு இராணுவத் தளபாடங்களை ரஸ்யா, சீனா, ஈரான், இந்தியா வழங்கி வருகின்ற போதிலும் இந்தியா வன்னி போர் களத்தில் நேரடியாக தலையிட்டு சிறிலங்கா இராணுவத்தினரை நெறிப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Saturday, March 21, 2009

மெல்பேர்ணில் வரலாறு காணாத 'உரிமைக்குரல் பேரணி

மெல்பேர்ணில் வரலாறு காணாத 'உரிமைக்குரல் பேரணி:
4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
[சனிக்கிழமை, 21 மார்ச் 2009, 04:02 பி.ப ஈழம்]
அவுஸ்திரேலியாவின் விக்டோறிய மாநிலத்தில் உள்ள மெல்பேர்ண் நகரில் சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' பேரணி இன்று மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இன்றைய நிகழ்வு மெல்பேர்ண் நகரில் இற்றை வரை நடைபெற்ற அனைத்து தமிழ் நிகழ்வுகளுக்கும் மகுடம் சூட்டியது போன்று காணப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் முகங்களே தெரியாத அளவுக்கு பார்த்த இடம் எங்கும் தமிழீழத் தேசியக் கொடிகளும் தமிழீழத் தேசியத் தலைவரின் உருவப்படங்களும் ஆயிரக்கணக்கில் மக்களின் கைகளில் மிதந்து கொண்டிருந்தன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மெல்பேர்ண் கிளையுடன் இணைந்து மெல்பேர்ணை தளமாக கொண்டியங்கும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் மெல்பேர்ண் நகரின் மத்தியில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அகவணக்கத்துடன் தொடங்கியது.

"எங்கள் நிலமே எமக்கு வேண்டும்"
"எங்கள் தலைவன் பிரபாகரன்"
"எங்களுக்கு வேண்டியது தமிழீழம்"
"முல்லைத்தீவில் ஆமியா தலைவனுக்கே சவாலா"
"காந்தி தேசம் சொல்லுது; புத்த தேசம் கொல்லுது"
"சூரியப்புதல்வன் பிரபாகரன்"
"அவுஸ்திரேலியா தமிழரை காப்பாற்று""சிறீலங்காவே தமிழினப்படுகொலையை நிறுத்து"
போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அவுஸ்திரேலிய சோசலிச கட்சியினர், சிறிலங்காவில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று பேரணியில் கலந்துகொண்டவர்களின் கையெழுத்துக்களை பெற்றுக்கொண்டனர்.
தாயகத்தில் தமிழ் உறவுகள் முகம் கொடுத்து வரும் மனிதப்பேரவல காட்சிகள் அடங்கிய இறுவட்டுகளும் தாயக நிலவரம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் பேரணியை பார்வையிட்டுச் சென்ற பல்லின மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.
முற்பகல் 11:30 நிமிடமளவில் சுதந்திர சதுக்கத்தில் இருந்து புறப்பட்ட பேரணி சுவான்ஸ்டன் வீதி மற்றும் பேர்க் வீதி வழியாக சென்று வி்க்டோறிய மாநில நாடாளுமன்ற கட்டட முன்றலை சென்றடைந்தது.
வீதி ஓரமாக சென்றுகொண்டிருந்த பேரணிக்கு காவல்துறையினர் முழு பாதுகாப்பும் வீதி ஒழுங்குகளையும் மேற்கொண்டு வந்தனர். காவல்துறையினருடன் இணைந்து தமிழ்த் தொண்டர்களும் வீதி ஒழுங்கமைப்பில் பணியாற்றினர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரது கைகளிலும் தேசியக்கொடியும் தேசியத் தலைவரின் படமும் காணப்பட்டமை எழுச்சிபூர்வமாகவும் கண்கொள்ளா காட்சியாகவும் காணப்பட்டது.
பேரணியில் மக்கள் போட்ட முழக்கங்கள் வானை கிழித்தது. அனைத்து இன மக்களையும் ஒரு கணம் நின்று பார்க்க வைத்தது.
பேரணி நாடாளுமன்ற கட்டட முன்றலை அடைந்ததும் அங்கும் மக்கள் முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து, எழுச்சி உரைகள் இடம்பெற்றன.
தமிழின உணர்வாளர் ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை, மூத்த குடிமக்கள் சார்பில் குணரட்ணம் ஆகியோர் உரையாற்றினர்.
இதனை அடுத்து, விக்டோறிய மாநில முதல்வருக்கான மனுவை ஈழத்தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவகுமார் படித்தார். பின்னர் அந்த மனு விக்டோறிய மாநில முதல்வரை சேர்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
- உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் - வன்னி வாழ் உறவுகளின் உடனடித் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய வழிவகை செய்யப்பட வேண்டும் - தமிழர்கள் தாம் நிம்மதியாக வாழும் பூர்வீக நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது - ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் - தமிழர்களின் பாதுகாப்பு கவசங்கள் களையப்படக்கூடாது.
ஆகிய விடயங்களை சிறிலங்காவில் உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்பின்னர், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சபேசன் உரையாற்றினார்.
நிகழ்வு பிற்பகல் 1:45 நிமிடமளவில் நிறைவுபெற்றது.
இன்றைய நிகழ்வுக்கு சிட்னியில் இருந்தும் இளையோர் வந்து பேரணிக்கு மிகவும் ஒத்துழைப்பு நல்கியமை குறிப்பிடத்தக்கது

திலீபன், காந்தி, அகிம்சைஇன் உண்மை.திலீபன், காந்தி, அகிம்சை

திலீபன் 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரைத் தமிழீழ விடுதலைக்காக அர்ப்்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சைப் போராட்டத்தை, அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மகாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கித் தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையைப் பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தைக் கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.
திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையைப் பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன். திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தியைப் போல முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை. எதிராளியின் வலிமையைப் பொறுத்தே உள்ளது. அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்குக் காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் இந்தியா விடுதலையான அதே நேரத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்றவற்றின் விடுதலைக்குக் காரணமாக அமைந்தது எது ? அகிம்சையா ?"
காந்தி தாத்தா வாங்கிக் கொடுத்த சுதந்திரம்" என பாடப்புத்தகங்களும், திரைப்படங்களும், ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய அகிம்சை பிம்பம் நம் மூளையைச் சலவை செய்ததில் இருந்து நாம் வெளியேறவேயில்லை. இந்தியா பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் ஒரு காலனியாக உருமாறியத்தற்கும் சரி, பிறகு விடுதலையானதற்கும் சரி - முக்கிய காரணம் - பொருளாதாரம் தான்.
in the larger world it came eventually to be realized that colonial territory was only marginally relevant to economic progress, if it was relevant at all. The dissidence and revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers are often credited with bringing the colonial era to end. More attention might well be accorded to the rather simple but persuasive fact that colonies had become no longer economically worthwhile. Territory was not the thing.
என்று தன்னுடைய "A Journey Through Economic Time" என்ற புத்தகத்தில் கூறுகிறார் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் கால்பிரைத். காலனியாதிக்கத்தின் விடுதலைக்கு revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers தான் காரணம் என்பதை கால்பிரைத் மறுக்கிறார். காலனியாதிக்கத்தின் முடிவுக்கு colonies had become no longer economically worthwhile என்பது தான் காரணம் என்கிறார் கால்பிரைத். இவரின் இந்த வாதம் தவிர வரலாற்றைப் பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இது நமக்குத் தெளிவாகப் புரியும். சோழர் கால வரலாறு முதல் இன்றைய இராக் யுத்தம் வரை அனைத்திற்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணமெனும் பொழுது அந்தப் பொருளாதாரக் காரணிகளை விலக்கியே வரலாற்றை மக்களுக்கு நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.
இன்றளவும் உலகில் உருவான பன்னாட்டு தனியார் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிறுவனம் - பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி தான். வணிக நோக்கங்களுக்காக உள்ளே நுழைந்து பின் படிப்படியாக நாடு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசிடம் சென்று சேர்ந்தது வரலாறு. பொருளாதாரக் காரணங்களுக்காக முதலில் தொடங்கிய காலனியாதிக்கம், பின்பு படிப்படியாக மாறி நாடு பிடிக்கும் ஆசையாக உருவெடுத்தது. பின் தங்கள் நாட்டின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிற நாடுகளைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாக மாற்றம் பெற்றுவிட்டது. இவ்வாறு உருவான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு கட்டத்தில் உலகின் கால்வாசி இடத்தை தன் வசம் வைத்திருந்தது. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இவ்வாறு உருவான நிலையில் தான் இந்த மிகப் பெரிய பரப்பளவை நிர்வகிப்பதில் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டது.
இந்தச் சூழ்நிலையில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் தான் இந்தியா உள்ளிட்ட பல காலனியாதிக்க நாடுகள் விடுதலை பெற முக்கியக் காரணமே தவிர, அகிம்சைக்குப் பெரிய பங்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை. இரண்டாம் உலகப் போர் ஐரோப்பிய நாடுகளுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. போரினால் நிர்மூலமான பொருளாதாரத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. அவ்வாறான தேவைக்கு இடையே ஒரு தூர தேசத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளை பராமரிப்பது பெருத்த சவால் மிகுந்த காரியமாகவே இருந்தது.
இந் நிலையில் தான் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் விடுதலை பெற்றன. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை மிக வலுவான பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் விளங்கிய பிரிட்டன் போருக்குப் பின் உலக அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழந்து அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வலுப்பெறத் தொடங்கியதன் பிண்ணனியும் இந்திய விடுதலையின் பிண்ணனியும் ஒன்று தான் - அது பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சரிவு.
காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற வகையில் அகிம்சை இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக உருவாக்கப்பட்டதே தவிர, இந்திய விடுதலை அகிம்சையால் மட்டுமே நிகழவில்லை.காந்தியின் அகிம்சைப் போராட்ட முறையாகட்டும், பாலஸ்தீனம், இலங்கை, காஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் ஆயுதப் போராட்டமாகட்டும் - இவற்றுக்கு ஒரு பொதுவான அடிப்படை உள்ளது. தங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்க, தாங்கள் எதிர்த்துப் போராடும் நாடுகளின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பது தான் இந்த பொதுவான நோக்கம். காந்தியின் நோக்கமும் அது தான், பிரபாகரனின் நோக்கமும் அது தான், ஹமாஸ் அமைப்பின் நோக்கமும் அது தான். ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலையை ஆதரிக்காத காந்தி, பிறகு நடத்திய பல போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கத் தான் முற்பட்டது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி அகிம்சை.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றாலும், அந்த அரசாங்கத்தை பிரிட்டிஷாரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தவர்கள் "இந்தியர்கள்" தான். இந்தியா போன்ற பெரிய நாட்டினை நிர்வாகிக்க கூடிய ஆட்பலமோ, இராணுவ, காவல்துறை எண்ணிக்கை பலமோ (ஆயுத பலம் அல்ல) பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இல்லை. அவர்கள் இந்தியர்களைச் சார்ந்தே தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறான நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியை முடக்க வேண்டுமானால் அவர்கள் செயல்படுவதை முடக்க வேண்டும். இந்தியர்கள் பிரிட்டிஷ் வேலையைப் புறக்கணித்தால், பிரிட்டிஷாரின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதைத் தான் காந்தி செய்ய முயன்றார். ஆனால் அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றார் என்பதை வரலாற்றைப் புரட்டுபவர்களுக்குப் புரியும்.இங்கு கவனிக்க வேண்டியது, ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதைக் காந்தி முன்னெடுத்தார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்கவில்லை என்றாலும் ஒரு புது போராட்ட முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.ஆனால் இந்த நிலையா இன்று ஆயுதப் போராட்டம் நடைபெறும் நாடுகளில் உள்ளது? மக்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சிறுபான்மையாக உள்ளவர்களின் போராட்டம் எந்த வகையிலும் அகிம்சையைக் கொண்டு நடக்க முடியாது. காரணம் இலங்கைப் பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்தியப் பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்தச் சிறுபான்மை இனத்தவரின் அகிம்சைப் போராட்டத்தை நசுக்கக் கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்தப் போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது.இத்தகைய நிலையில்தான் அகிம்சை என்பது அர்த்தமில்லாமல் போய் விட்டது. இலங்கை, பாலஸ்தீனம், காஷ்மீர் போன்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அவர்கள் எதிர்த்துப் போரிடும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதில் தான் உள்ளது. அதனால் தான் ஆயுதப் போராட்டங்கள் தொடங்குகின்றன. ஒரு விடயத்தைக் கவனிக்கலாம்.
இன்று இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியிருக்காவிட்டால் இலங்கை பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும். சிங்கள ஆதிக்கம் முழுமை பெற்றிருக்கும். மாறாக ஆயுதப் போராட்டம் சிங்கள ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், இலங்கையின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்தும் இருக்கிறது.அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறை அல்ல. அது ஒரு கவன ஈர்ப்பு. இந்தக் கவனயீர்ப்பைக் காந்தி சரியாக நடத்தினார். ஆனால் திலீபன் அகிம்சையைத் தன் போராட்ட வடிவமாக எடுத்தார். அதன் பலன் அவர் உயிர் இழப்பு.திலீபனின் நினைவு தினம் அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறையல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி விட்டுச் செல்கிறது

Friday, March 20, 2009

மக்களே மாற்றம் தேவை; சிந்திங்கள்

இன்று வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது இந்த வலைப்பதிவு. ஏதோ சில்லறை வோணும்னு சொல்றாகளே என்னா மேட்டருன்னு போய் பாத்தா…”ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்குவோம்” என்று காரசாரமாக போட்டுத்தாக்கியிருந்தார்கள். கொஞ்சம் பின்னே போனால், ” தமிழகக்திற்கு மாற்றம்: காங்கிரசுக்கோ,திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ, ஓட்டு போடக்கூடாது; போட மாட்டோ ம்” என்று பிளிறி இருந்தார்கள். யார்ராதுன்னு பாத்தா…. நம்ம குழலி! அப்ப பா.ம.கவுக்கு? நிச்சயம் பா.ம.கவுக்கு ஓட்டுப்போட்டுத்தான் ஆக வேண்டும்.. ஏன்னா, இவுக தான் மத்திய அரசுல இருந்துகிட்டு இலங்கை ராணுவத்துக்கு ஆயுதம் கொடுப்பதையெல்லாம் தட்டிக் கேட்டுப் புடுங்கிக் கத்தை கட்டிவிட்டார்களாச்சே..
அட, கொறஞ்சது “அய்யா.. நமக்கும் உனக்கும் இனி ஆவாது. நீ எங்க மக்கள கொல்றவனுக்கு ஆயுதம் தர்ரே.. நீயே கூட நின்னு கொல்றே.. நமக்குள்ளே ஒட்டாது.. அத்துக்கலாம்”அப்படின்னு சொல்லி காங்கிரஸ் கூட்டனியிலிருந்தாவது வெளியே வந்திருந்தா… லிஸ்டுல பா.ம.க பேர் விட்டுப்போனது நியாயம்னு சொல்லலாம். அட இவங்கய்யாவே இன்னும் சொனியா காலை நக்கிட்டு இருக்கான்… கேவலம் அமைச்சர் பதவி - அத்தத் தூக்கியெறிய மனசில்லெ - துப்பில்லெ… பொறுக்கி அரசியல் ( அதாவது காங்கிரஸ் போடறதபொறுக்கித் திங்கர அரசியல் ) செய்யற கட்சி பா.ம.க - அந்தாளு போன வாரம் பேப்பர்ல சொல்றான் “ஜெயலலிதா கூட கூட்டனி வைக்க கருணாநிதி நிர்பந்திக்கிறார்” அப்படின்னு… எந்த ஜெயலலிதா…….? விடுதலைப்புலிகளையல்ல - ஈழத்தமிழ் மக்களையே எதிரிகளாகக் கருதும் ஜெயலலிதா! விடுதலைப்புலிகளையல்ல - ஈழத்தமிழ் மக்களின் ஈரக்குநலயை அறுத்தெறியத் துடிக்கும் பாப்பாத்தி ஜெயலலிதா! நல்லா இருக்குடா ஓன் யோக்கியத… இவனெல்லாம்…. தமிழினவாதி - தமிழ் குடி தாங்கி - லொட்டு… லொசுக்கு - மயிறு….மட்டை.
நம்ம நன்பர் குழலி நியாயமா பா.ம.கவயும் லிஸ்ட்ல சேர்த்திருந்தா பாராட்டியிருக்கலாம். செல்லமா சொல்றாப்ல.. “ராமதாஸ் மீனுக்கு வாலாகவும்….பாம்புக்குத் தலையாகவும்….”…ஏன் மென்னு முழுங்கறீங்க?? நான் சொல்றேன் - ராமதாஸ் மொத்தமாகவே பாம்பு தான்! சாதி தான் ராமதாஸின் அரசியல்.. இந்த தமிழினவாதி வேஷமெல்லாம் ஒரு பரந்து பட்டதளத்தில் பா.ம.கவை எஸ்டாப்ளிஷ் செய்யும் முயற்சி. அந்நியர் ஓட்டு பா.ம.கவுக்கு இல்லை என்ற செருப்படி பட்டவுடன் இப்போ தமிழின அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டு டகுல் பாச்சா காட்டுகிறார் - அதையும் ஒழுங்கா செய்யாம சொதப்பல் வேறு - வேணும்னா டகுல் பாச்சா காட்டுவது எப்படி என்று சீனியர் ராமதாஸான கருணா(நிதி)விடம் போய்ஜூனியர் கருணா(நிதி)யாகத் துடிக்கும் ராமதாஸ் ட்யூஷன் கற்றுக் கொள்ளலாம்.
ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்குவார்களாம். எதுக்கு……?
இன்னிக்கு காங்கிரஸ் காலை நக்குவதில் இருந்து முன்னேறி இன்னொருத்தன் காலை நக்குவதற்கா? இந்திய ஓட்டரசியல் சட்டகத்திற்குள் நின்று கொண்டு எந்தக் கொம்பனாக இருந்தாலும் ஈழ விடுதலைக்காக ஒரு மயிரையும் புடுங்கி விட முடியாது. ஈழ விடுதலை என்றில்லை இந்தப் பிராந்தியத்தில் நிகழும் எந்த இன விடுதலைப் போராட்டத்தையும் இந்தியா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்..
சேஞ்சு சேஞ்சுன்னு ஓபாமா கணக்கா பிளிர்ராங்களே… அப்படி அந்த ஓட்டரசியலின் லிமிட்டேசன் என்னவென்பது தமிழகத்தில் பாயில் சுச்சா போகும் சுள்ளான் கூட சொல்லி விடுவான்.. தி.மு.க ஏற்கனவே வெளக்கெண்ணையில் குண்டி கழுவிக்கொண்டிருக்கிறது… இலங்கைக்கு ஆயுத உதவி செய்வது மத்திய அரசின் உரிமை அதையெல்லாம் நம்மாளே கேட்க முடியாதுன்னு சொல்லியாச்சு….. மனித சங்கிலி, ஆட்டு சங்கிலி, மாட்டு சங்கிலி, குரங்கு சங்கிலின்னு கலைஞர் கைவசம் ஏகப்பட்ட ஐடியா இருக்கு.. முழுமையான தரகுவர்க்க கட்சியாகிவிட்ட தி.மு,க இந்தப் போரில் இந்திய ஆளும் தரகு வர்க்கத்தின் அடிப்படை நோக்கத்திற்கு மாறாக வாயைத் திறக்கக் கூட முடியாது.
காங்கிரசுக்கும் அ.தி.மு.கவுக்கும் தமிழன் செத்தா சந்தோஷம்; அவன் ஈழத்தமிழனா இருந்தாலும் சரி தமிழகத் தமிழனா இருந்தாலும் சரி. பாமக யோக்கியதை என்னான்னு இன்னொரு தடவ சொல்லத் தேவையில்லை… திருமா ஏதோ பிட்டு போட்டு பாக்கறாரு… ஆனா, தமிழ்நாட்டின் பரம்பரை வழக்கமான தி.மு.க vs அ.தி.முக என்ற தேர்தல் கள நிலைமையை ஒத்துதான் திருமாவின் அரசியல் அமையும். தனியே ஈழத்தை முன்னிட்டு ஒரு கூட்டனி அமைவதற்கான லேசான அறிகுறி கூட இல்லை. வழமை போலவே கூட்டனிக் கணக்குகள் அமைந்து விட்டால்….? அவரும் வைக்கோவைப் போல - அதாவது காயடிக்கப்பட்ட நாயைப் போல - அம்மா கிட்டயோ அய்யா கிட்டயோ அப்ரூவல் வாங்கிட்டுத் தான் மேற்கொண்டு பேசவே முடியும்…
தே.மு.தி.க? இந்தத் தேர்தலுக்கு அப்புறம் விஜயகாந்து சூட்டிங்ல பிஸியாய்டுவார் - இப்பவே கதை கேட்க ஆரம்பித்து விட்டதாக கேள்வி.. ப்ரொடியூசர் கெடைக்கலீன்னா கலைஞர் டீவி மெகா சீரியல்ல அப்பா வேசம் குடுக்கறதா அழகிரி சொல்லியிருக்காரம் !
ச.ம.க ? 1977 ரிலீஸ்
வக்காளி… விஜயகாந்து சரத்துகுமாரெல்லாம் அரசியல்வாதி… இந்த கேவல நிலை தான் இந்திய தேர்தல் அரசியல் வந்து சேர்ந்திருக்கும் நிலை.
அப்புறம் ஒரு ஜோடி தோலாந்துருத்திக இருக்கானுங்க. அதுல ஒன்னு சி.பி.எம் இன்னொன்னு சி.பி.ஐ. மொதல் ஆளு ஜெயா மாமி வீட்டு டாய்லெட்ல அடைப்பை எடுக்க போயிக்கான்.. அடுத்தாளு அவிங்க தோட்டத்துக்கு தண்ணி காட்டப் போயிருக்கான்.. அவ்வளவு தான்
இதெல்லாம் ஒன்னும் வெளங்காது..
சரி…. ஒரு வாதத்துக்காக ஈழ விடுதலையை அங்கீகரிக்கும் கட்சிகள் எல்லாம் கூட்டணி கட்டி தேர்தலை வென்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்து விடுவார்கள்? சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவார்கள் - அவ்வளவு தான் முடியும்! அவ்வளவுக்கு தான் உரிமை இருக்கிறது. சரி அப்படியே தில்லா மைய்ய அரசுக்கு விரோதமாக மாநிலத்தில் ஆட்சியில் இருந்து கொண்டே மக்களை அணி திரட்டினால் - ஆட்சியைக் கலைப்பான் - இல்லேன்னா ராணுவத்தை அனுப்பி நொங்கைக் கழட்டுவான். இங்கே இருக்கும் தேர்தல் அரசியல் என்பது மக்களை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள முடியாத விதிகளைக் கொண்டிருக்கிறது - அப்படியே வருந்திக் கூப்பிட்டாலும் மக்கள் கிட்டேநெருங்க முடியாத அளவுக்கு ஜனநாயகமற்று இருக்கிறது.. எனவே அப்படியான ஒரு நெருக்கடி மத்தியிலிருந்து ஏவிவிடப்படும் போது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கும் கட்சிகளின் டப்பா டான்ஸாடி விடும்.
இன்னிக்குத் தேதியில் தமிழகத்தில் பரவலாக மக்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்… ஈழத்திலிருந்து வரும் ஒவ்வொரு செய்தியும் இங்குள்ள தமிழனின் உள்ளத்தை பதறச் செய்து கொண்டிருக்கிறது… அங்கே மக்கள் படும் பாடு நம் உள்ளத்தை குத்திக் கிழிக்கிறது… இந்த உணர்வுகளை அரசியல்படுத்த வேண்டும் ( அரசியல்படுத்த வேண்டும் வோட்டுப்படுத்தக் கூடாது) தமிழக மக்களின் அரசியல் எழுச்சி இந்தியக் கட்டமைப்புக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்னும் நிலை வந்தால் தான் அங்கே போர் நிற்கும். ஆனால் மேற்சொன்ன வலைத்தளமாகட்டும், இன்றைக்கு ஈழப்பிரச்சினையில் களத்திலிறங்கியிருக்கும் ஓட்டுக்கட்சிகளாகட்டும் இதை எப்படி தமது கட்சிக்கு சாதகமான ஓட்டுக்களாக கன்வெர்ட் செய்வதுஎன்பதிலே தான் குறியாக இருக்கிறார்கள்.
ஆனானப்பட்ட கருணாநிதியே இத்தனை வருச தேர்தல் அரசியலுக்குப் பிறகு வந்து சேர்ந்திருக்கும் நிலை இந்தப் பரிதாபகரமான நிலைதான் என்னும் போது.. அரசியலில் பல பழங்களைத் தின்று பல கொட்டைகளையும் சில ***ட்டைகளையும் போட்டவரே இன்றைக்கு சாத்திக்கிட்டு ஓக்காந்திருக்கும் போது… வேறு எவராலும் இந்த தேர்தல் அரசியல் பாதையில் மக்களைத் திரட்டவோ - அதன் மூலம் மைய்ய அரசைப் பணிய வைக்கவோ - அதன்மூலம் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவரவோ - இந்தியாவையும் இலங்கையையும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வைக்கவோ - முடியாது.
மக்கள் எழுச்சியை தேர்தல் அரசியல் என்னும் குறுகிய வட்டத்துக்குள் இட்டுச் செல்வது என்பது இவ்வெழுச்சிக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகவே முடியும்.